Total Pageviews

Thursday, April 25, 2013

வாழ்க்கை கற்று கொடுத்த சில நல்ல விஷயங்கள்

ஒருவருடைய மதிப்பு/உயர்வு அவர் உயிரோடு இருக்கும் போது தெரிவதில்லை....தெரிந்தாலும் நம்முடைய கௌரவகுறைச்சலால/சிறுபிள்ளைதனத்தால் நாம் அதை ஒத்துகொள்வதில்லை....பின்னாளில் இல்லாத போது கதறி அழுது/வருத்தபட்டு பிரயோஜனம் இல்லை....இருக்கும் போது சந்தோஷமாய் இருப்பது மேல்.....அடுத்த நொடி உயிரோட இருப்போமானு யாருக்கும் தெரியாது....அப்புறம் எதுக்கு இந்த பிடிவாதம், ஆணவம், செருக்கு எல்லாம்?....விட்டு கொடுத்து போவதால் எந்த நஷ்டமும் இல்லை....மதிப்பு தான் உயருமே தவிர தாழ்ந்து போக போவது இல்லை... மேலே கூறியவை அனைத்தும் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் பொருந்தும்....அதே மாதிரி மனைவியிடம் எப்படி வேணும்னாலும் திட்டலாம், என்ன வேணாலும் கடிந்து சொல்லலாம் என்று என்ன கூடாது....அதற்கும் ஒரு எல்லை உண்டு....உன்னுடைய எதிர்பார்ப்பு என்னவோ அது போல தான் அந்த பக்கமும் இருக்கும்....எல்லா மனிதர்களுக்கும் மனசு என்பது உண்டு....நாம் அதை அறிந்து மற்றும் புரிந்து கொண்டாலே போதும்.... அது போல தான் நேரமும்....இருக்கும் போது குழந்தைகலோடையும் பெற்றோற்குலோடேயும் மனைவியுடனும் அன்பாக இருக்க முயற்சி செய்தல் நல்லதாக இருக்கும்....பணம் தேவை தான்...அதன் பின்னல் காலம் பூராவும் ஓடி விட்டு பின்னர் ஓய்ந்து போன பிறகு திரும்பி பார்த்தல் நீ மட்டும் தான் நிற்பாய்....உன் நினைவுகள் திரும்பி பார்த்து சிரிக்கும்....ஊர் பூராவும் சொத்து சேர்த்தி என்ன பயன்?...அதை அனுவிபதற்கு நீ இருக்க வேணும் அல்லவா?. பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு செல்வம் கொடுத்தல் மட்டும் போதுமானது....அவர்கள் எதிர் காலத்தை அவர்கள் தீர்மானம் செயட்டும்....ஜாதி எல்லாம் வெறும் வேஷம் தான் என்னை பொறுத்த வரை....